சித்திரை பெருவிழாவில் சமயபுரம் மாரியம்மன் சேஷ வாகனத்தில் வீதி உலா

சித்திரை பெருவிழாவில் சமயபுரம் மாரியம்மன் சேஷ வாகனத்தில் வீதி உலா
X

சேஷ வாகனத்தில் எழுந்தருளினார் சமயபுரம் மாரியம்மன்.

சித்திரை பெருவிழாவில் சமயபுரம் மாரியம்மன் சேஷ வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தமிழகத்திலுள்ள சக்தி தலங்களில் முதன்மையானது திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் ஆகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது‌.

அதனை தொடர்ந்து அம்பாள் ஒவ்வொருநாளும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் .இந்நிலையில் விழாவின் ஏழாம் நாளான நேற்று அம்பாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்தார். அப்போது பக்தர்கள் அம்பாளுக்கு கற்பூரம் ஏற்றியும் தேங்காய் பழம் சாற்றியும் வழிபாடு செய்தனர்.

Tags

Next Story
ai future project