திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் ஆடு திருடிய 2 பேர் கைது

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் ஆடு திருடிய 2 பேர் கைது
X
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் நம்பர்-1 டோல்கேட்டில் உள்ள வாழவந்திபுரத்தில் ஒரு வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனது. இது குறித்து கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் 2 பேர் ஆட்டை திருடி சென்ற காட்சி பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தி திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள திருவளர்ச்சோலையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 49), சுப்பிரமணி (40) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்