சமயபுரம் கோவில் அர்ச்சகருக்கு கொலை மிரட்டல்: காவலர் மீது புகார்
அர்ச்சகர் மகேஷ்குமார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியை சேர்ந்த மகேஷ்குமார். இவர் திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலான முக்தீஸ்வரர் கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ், அர்ச்சகராக பணியாற்றி வருகிறார்
இந்நிலையில், அவர் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சமயபுரம் மாரியம்மன் கோயில் குடியிருப்பு வளாகத்தில் நானும் எனது மனைவியும் வசித்து வரும் வருகிறோம். எனது வீட்டின் அருகில் வசிக்கும் 27 வயதான சித்ரா என்ற பெண்ணிற்கும், கோயில் காவலர் வரதன் என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் சமயபுரம் போலீசார் வரதனை கைது செய்தனர்.
ஜாமீனில் வெளியில் வந்த காவலர் வரதன் அர்ச்சகர் ஆன என்னை எனது சாதியை குறிப்பிட்டும் அர்ச்சகர் பணியில் நீடிக்கக் கூடாது எனவும் அருகிலுள்ள வீட்டினரிடம் நீ பேசக்கூடாது. தொடர்ந்து என்னை அடையாளம் தெரியாத சிலரோடு சேர்ந்து மதுபோதையில் மிரட்டி வருகிறார்.
இது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 22-ஆம் தேதி சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணி, காவல் துறையினரிடம் புகார் அளித்தேன். இந்த புகார் தொடர்பாக இந்நாள்வரை எவ்வித விசாரணையும் இல்லை.
இந்நிலையில் 5-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு, மதுபோதையில் எனது வீட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்து என்னையும் எனது மனைவியையும் திட்டி, அர்ச்சகர் வேலையை விட்டு விலகிவிட வேண்டும் எனவும் என் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறவேண்டும். காவலர் வரதன் என்னை மிரட்டி தாக்க முற்பட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu