சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை
X

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து நேர்த்திக் கடனை நிறைவேற்றி, காணிக்கைகளை உண்டியலில் செலுத்துவது வழக்கம். இந்த காணிக்கைகளை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை எண்ணி வங்கியில் செலுத்துவார்கள்.

அதேபோல கோயில் மண்டபத்தில், நேற்று கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர்கள் மோகனசுந்தரம், விஜயராணி ஆகியோர் முன்னிலையில், கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணினர்.

அதில், சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்களில், ரொக்கம் ரூ.92.20 லட்சம், தங்கம் 2 கிலோ 733 கிராம், வெள்ளி 5 கிலோ 680 கிராம் மற்றும் 91 வெளிநாட்டு கரன்சிகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture