திருச்சி சமயபுரம் தனியார் பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

திருச்சி சமயபுரம் தனியார் பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு
X

8 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி.

திருச்சி சமயபுரம் தனியார் பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் 3 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கசாவடி அருகே எஸ்ஆர்வி மெட்ரிக் மேனிநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி 6-ஆம் வகுப்பு முதல் +2 வரை உள்ளது. இப்பள்ளியில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தினசரியாகவும், விடுதியிலும் தங்கியும் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் 12-ம் வகுப்பு விடுதி மாணவர்கள் 5 பேருக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதே போல தினசரி வீட்டிலிருந்து பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்கள் 3 பேர் என 8 பேருக்கும் தொடர் காய்ச்சல் ஏற்பட்டது.

இதனையடுத்து விடுதி மாணவர்களை தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்ததில் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அதே போல தினசரி வீட்டிலிருந்து பள்ளி வந்த +2 மாணவர்கள் 3 பேர் என மொத்தம் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி மற்றும் அனைத்து விடுதிகளைகளையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய இன்று 20-ஆம் தேதி முதல் 21, 22 வரை 3 நாட்களுக்கு பள்ளி மற்றும் விடுதிகள் விடுமுறை என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story