சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
X

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று தைப்பூச விழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது.

சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்குவது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில். மிகவும் சக்திவாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த ஆண்டிற்கான தைப்பூச விழா இன்று தொடங்கி வருகிற 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை யொட்டி இன்று கோவில் கொடி மரத்தில் சமயபுரம் மாரியம்மன் படத்துடன் கூடிய கொடி ஏற்றப்பட்டது. அப்போது கொடி பட்டம் மற்றும் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

தைப்பூச விழா தொடங்கியதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உற்சவ மாரியம்மன் கோவில் வளாகத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்