சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மீண்டும் தங்கத்தேரோட்டம் தொடங்கியது

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மீண்டும் தங்கத்தேரோட்டம் தொடங்கியது
X

சமயபுரம் மாரியம்மன்கோயிலில் இன்று தங்க தேரோட்டம் மீண்டும் தொடங்கியது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மீண்டும் தங்கத்தேரோட்டம் இன்று தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்கத்தேர் இழுப்பது வழக்கம். தங்கத்தேர் இழுப்பது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசு அறிவுறுத்தலின்படி, திருச்செந்தூர் முருகன் கோவிலில் சில தினங்களுக்கு முன்பு தங்கத்தேர் இழுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதற்காக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த தங்கத்தேரை சுத்தப்படுத்தி மின்விளக்குகள் பொருத்தும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, தங்கத்தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் இரவு 7 மணிக்குள் கோவில் வெளிப்பிரகாரத்தில் தங்கரத உலா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) செல்வராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture