சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் இன்று கொடியேற்றம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள்.
இந்த ஆண்டுக்கான சித்திரை தேர் திருவிழா வருகிற 19-ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.
இதற்காக அம்மன் இன்று காலை 8 மணி அளவில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் அருகில் வந்தார். அப்போது சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வருகிற 19-ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் காலை ,இரவு இரு வேளைகளிலும் அம்மன் கேடயம் மற்றும் சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu