சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.83 லட்சம், 3 கிலோ தங்கம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.83 லட்சம், 3 கிலோ தங்கம்
X

சமயபுரம் மாரியம்மன்.

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டதில் ரூ.83 லட்சம் காணிக்கை 3 கிலோ தங்கமும் கிடைத்தது.

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்களில் பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கைகள் மாதம் 2 முறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர்கள் விஜயராணி (மலைக்கோட்டை), ரமேஷ் (நாமக்கல்), மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் பிருந்தாநாயகி ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டன.

இதில் காணிக்கையாக ரூ.83லட்சத்து, 3 ஆயிரத்து 237-ம், 2 கிலோ 930 கிராம் தங்கமும், 2 கிலோ 360 கிராம் வெள்ளியும், அயல்நாட்டு பணம் 74-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

Next Story
ai in future agriculture