சமயபுரம் தேர் திருவிழாவில் பக்தர்களை காக்க அமைச்சர் நேரு எடுக்கவேண்டிய நடவடிக்கை என்ன?

சமயபுரம் தேர் திருவிழாவில் பக்தர்களை காக்க அமைச்சர் நேரு எடுக்கவேண்டிய நடவடிக்கை என்ன?
X

அமைச்சர் நேரு

சமயபுரம் தேர் திருவிழாவில் பக்தர்களை காக்க அமைச்சர் நேரு எடுக்கவேண்டிய நடவடிக்கை எடுக்கவேண்டும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரைத் தேர்த் திருவிழா நடந்து வருகிறது. அம்பாள் தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

தேர் வரும் பாதையில் கடைகள் மற்றும் பல ஆக்கிரமிப்புகள் உள்ளன. கடைகளை எல்லாம் சந்தை பெரு நிலப் பகுதியில் செயல்பட தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முடிந்தால் அமைச்சர் நேரில் கள ஆய்வு செய்தால் மிகவும் நல்லது.

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கிய பெருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். போலீசாரின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் நெரிசலில் சிக்கி பக்தர்கள் இருவர் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்து விட்டார்கள்.

இது போன்ற துயர சம்பவம் சமயபுரத்தில் நடைபெறாத வகையில் முன் ஏற்பாடாக பாதுகாப்புத் திட்டத்தை அமைச்சர் நேரு முன்நின்று செயல்படுத்திட வேண்டும். ஏனென்றால் மதுரையை விட சமயபும் சிறிய ஊர். 2 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம் நடப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே முறையான திட்டமிடல் அவசியம் என எம்.ஜி.ஆர். நற்பணி மன்ற செயலாளர் கண்ணன் என்கிற ராமகிருஷ்ணன் அமைச்சர் நேருவிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Tags

Next Story
ai marketing future