முசிறி அருகே குளத்தில் குளித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

முசிறி அருகே குளத்தில் குளித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X
திருச்சி மாவட்டம் முசிறி அருகே குளத்தில் குளித்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள நெய்வேலி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் கோபிநாத் (வயது 15). இவர் தண்டலை புத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் கோபிநாத்தும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் சிலரும் அருகே உள்ள அம்மாயி குளத்தில் லாரி டியூப் உதவியுடன் குளித்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் கோபிநாத் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் மற்றும் முசிறி மீட்புப்பணி குழுவினர் அங்கு வந்து குளத்தில் இறங்கி கோபிநாத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். 4 மணி நேர தேடுதலுக்கு பின்னர் கோபிநாத் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!