பாதயாத்திரை சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

பாதயாத்திரை சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
X
திருச்சி அருகே பாதயாத்திரை சென்ற பக்தரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி பகுதியை சேர்ந்தவர் சந்துரு (வயது 51). தனியார் நிறுவன ஊழியரான இவர் சமயபுரம் கோவில் செல்வதற்காக புள்ளம்பாடியில் இருந்து நம்பர் 1 டோல்கேட்டிற்கு பஸ்சில் வந்தார். பின்னர் பாதயாத்திரையாக சமயபுரம் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாருதி நகர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது மொபட்டில் வந்த, லால்குடி அருகே உள்ள பூவாளூர் பெரியார் தெருவை சேர்ந்த லோகநாதன் மகன் பிரேம்குமார் (வயது 20), முருகன் மகன் விஜய் என்கிற மாணிக்கம் (வயது 20) உள்பட 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி சந்துருவிடம் இருந்த ரூ.2 ஆயிரத்து 700 மற்றும் ஒரு செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பிரேம்குமார், மாணிக்கம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் வெங்கடேஷ் (வயது 20) என்பவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!