திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்
X
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கி உள்ளது.

தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் சிறப்பு வாய்ந்த தலங்களில் ஒன்று திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும்.இத்திருத்தலத்தில் உள்ள மாரியம்மன் தனது சுயம்பு திருமேனியில் நவக்கிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் உள்ளடக்கிய இயந்திர திருமேனி பிரதிஷ்டையில் உள்ளடக்கி சக்தி தலங்களில் ஆதி பீடமாக சுயம்பு வடிவமாக சுதையினால் அஷ்ட புஜங்களுடன்அருள்பாலிக்கிறாள்.

இத்திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி அமாவாசை, மறுதினம் பிரதமை முதல் நவமி வரை தேவி பாகவதம், அக்னி புராணம்தேவி மஹாத்மியம் ஆகிய புராணக் கூற்றுகளின்படி அசுரனான மகிஷாசுரனை அழிக்க ஊசிமுனையில் துர்க்கை, மகாலெட்சுமி, சரஸ்வதி என முறையேமுதல், நடு, கடை 9 நாட்கள் கடும் தவம் புரிந்து 10-வது நாள் விஜயதசமியன்று வெற்றி பெற்ற திருநாளை நவராத்திரி பெருவிழாவாக கொண்டாடுவது இத்திருத்தலத்தின் மரபு.

அதன்படி நவராத்திரி திருவிழா தொடங்கி வருகிற 23-ந் தேதி வரை நவராத்திரி உற்சவமும், சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நாளான 24-ந் தேதி இரவு.30 மணிக்கு அம்பாள் புறப்பாடாகி வன்னிமரம் அடைந்து அம்பு போடும் நிகழ்ச்சியும் நடைபெறும். நவராத்திரி உற்சவத்தின்போது தினமும் மாலை 4.30மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 6.00 மணிக்கு புறப்பாடாகி கோவில் மேற்கு பிரகார நவராத்திரிமண்டபத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பாள்.

இன்று முதல் நவராத்திரி விழாவானது முதல் நாள் வித விதமான வித்தியாசமாக கொலுபொம்மைகளுடன், குமாரிகா அலங்காரத்தை காண உள்ளூர் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். பின்னர் இரவு 8 மணியளவில் சிறப்புதீபாராதனையும், ஒவ்வொரு நாளும் அலங்காரம் தரிசனத்துடன் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறஉள்ளது. இதேபோல் திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவிலிலும் கொலு பொம்மைகள் வைத்து அம்பாள் அலங்காரத்துடன் காட்சி அளிக்கிறார். நவராத்திரிதிருவிழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா