திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது
X
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிவில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டது.
By - Harishpriyan, Reporter |30 Nov 2021 11:30 AM IST
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் செலுத்திய ரூ.60 லட்சம் காணிக்கை கிடைத்தது
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மாதம் 2 முறை எண்ணப்படும். அதன்படி இந்த மாதத்தில் 2-வது முறையாக நேற்று கோவில் அதிகாரிகள் முன்னிலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதில் உண்டியல்களில் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக வந்த ரூ.60 லட்சத்து 19 ஆயிரத்து 9 ரொக்கமும், 2 கிலோ 58 கிராம் தங்கமும், 2 கிலோ 130 கிராம் வௌ்ளியும், அயல்நாட்டு பணம் 38-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்டியல் எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu