மண்ணச்சநல்லூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு

மண்ணச்சநல்லூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு
X

சிவசண்முக குமார்.

மண்ணச்சநல்லூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் தி.மு.க. வேட்பாளராக சிவ சண்முக குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளில் மண்ணச்சநல்லூரும் ஒன்று. இந்த பேரூராட்சி தலைவர் பதவிக்கான தி.மு.க. வேட்பாளராக சிவசண்முக குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். மண்ணச்சநல்லூர் பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தி.மு.க. வே வெற்றி பெற்று இருப்பதால் சிவசண்முக குமாரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே இவர் நாளை நடைபெறும் மறைமுக தேர்தலில் தேர்வு பெற்று மண்ணச்சநல்லூர் பேரூராட்சி தலைவராக பதவி ஏற்பது உறுதியாகி விட்டது. இவர் ஓய்வு பெற்ற பெல் பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!