ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் மண்ணச்சநல்லூர் கிளை துவக்க விழா

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் மண்ணச்சநல்லூர் கிளை துவக்க விழா
X

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் மண்ணச்சநல்லூர் கிளை துவக்க விழாவில் மாநில தலைவர் அருள் ஜோஸ் பேசினார்.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் மண்ணச்சநல்லூர் கிளை துவக்க விழா நடைபெற்றது.

திருச்சியை தலைமை இடமாக கொண்டு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச் சங்கத்தின் மண்ணச்சநல்லூர் வட்டக்க கிளை துவக்க விழா நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ப.அருள்ஜோஸ் புதிய கிளையை தொடங்கி வைத்து பேசினார்.

விழாவில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில பொருளாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜி. பாண்டுரங்கன் விழாவிற்கு தலைமை வகித்தார். 45 உறுப்பினர்கள் புதிய சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். மாநில பொருளாளர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் மாரிமுத்து இணைச் செயலாளர் செல்வி ஆஜிராபீவி, முசிறி வட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன், செயலாளர் திருஞானசம்பந்தம், திருச்சி கிழக்கு வட்டத் தலைவர் பாலசுப்ரமணியன், ஓய்வு பெற்ற மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தொடக்கத்தில் இராசரத்தினம் வரவேற்புரை நிகழ்த்தினார். இறுதியாக கலியன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

Tags

Next Story
future ai robot technology