மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனுக்கு உற்சாக வரவேற்பு .

மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனுக்கு உற்சாக வரவேற்பு .
X
மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

திருச்சி ; திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத் தலைவர் சீனிவாசனின் மகன் கதிரவன் போட்டியிடுவதாக திமுக தலைமை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து வேட்பாளர் கதிரவன் சென்னை அறிவாலயத்தில் முக்கிய தலைவர்களை சந்தித்து விட்டு, மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு வந்தார். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் சமயபுரம் பகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். சமயபுரம் கடை வீதி பகுதியில் நகர திமுக சார்பில் கேரளா சென்டை மேளம், தப்பாட்டம், மற்றும் வாணவேடிக்கை முழங்க வரவேற்பு நடைபெற்றது. வேட்பாளர் கதிரவன் சமயபுரம் கடை வீதியில் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பில் பங்கேற்றார். வேட்பாளருக்கு யானை மாலை அணிவித்தது . பெண்கள் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டு வரவேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!