/* */

லாரி டிரைவர், கிளீனரை மிரட்டி செல்போன், பணம் பறிப்பு; 3 பேர் கைது

சமயபுரம் கடைவீதியில் லாரி டிரைவர், கிளீனரை மிரட்டி செல்போன், பணம் பறித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

லாரி டிரைவர், கிளீனரை மிரட்டி செல்போன், பணம் பறிப்பு;  3 பேர் கைது
X

வழிபறி வழக்கில் கைதுசெய்யப்பட்ட 3 குற்றவாளிகள்.

திருச்சிமணப்பாறை அருகே குமரவாடி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(40). லாரி டிரைவரான இவர் கடந்த ஜூன் மாதம் 26 ந்தேதி இரவு திருச்சியில் இருந்து இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு பீகாருக்கு சென்று கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த லாரி கிளீனர் உமாசங்கர் சங்கர் என்பவரும் உடன் வந்தார்.

அப்போது சமயபுரம் கடைவீதியில் இரவில் டிபன் சாப்பிடுவதற்காக தனியார் திருமண மண்டபம் எதிரே லாரியை நிறுத்திய போது மர்ம நபர்கள் சிலர் டிரைவர் மற்றும் கிளீனரை மிரட்டி 2 செல்போன் மற்றும் 8 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து லாரி டிரைவர் வெங்கடேஷ் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் வழக்கில் தேடப்பட்டு வந்த மர்ம நபர்கள் 2 மாதத்திற்குப் பின் வாகன சோதனையின் போது குற்றவாளிகள் போலீசாரிம் சிக்கினர்.

விசாரணையில் தாளக்குடியைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ்(20), மண்ணச்சநல்லூர் இந்திராரைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன்(20), அஜித்குமார் (20) ஆகியோர் லாரி டிரைவரிடம் செல்போன்,பணம் திருடியதை ஒப்புக் கொண்டனர். பின்னர் மூவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். கைது செய்த அனைவரையும் திருச்சி ஜேஎம் 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மனப்பாறை கிளைச் சிறையில் அடைத்தனர்.

Updated On: 10 Aug 2021 10:51 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  2. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  3. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  4. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  7. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  8. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  10. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்