குணசீலம் பகுதியில் வயல், வீடுகளில் மது பாட்டில் பதுக்கி விற்பதாக புகார்

குணசீலம் பகுதியில் வயல், வீடுகளில் மது பாட்டில் பதுக்கி விற்பதாக புகார்
X

பைல் படம்

திருச்சி மாவட்டம் குணசீலம் பகுதியில் வயல், வீடுகளில் மது பாட்டில் பதுக்கி விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது.

திருச்சி மாவட்டம் வாத்தலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சிறுகாம்பூர், குருவம்படட்டி ஆகிய பகுதிகளில் அரசு மதுபானக்கடைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆமூர், குணசீலம், கொடுந்துறை, துடையூர், சித்தாம்பூர், கல்லூர், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் வயல், வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனை பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் குடும்ப தலைவர்கள் அதிகாலையிலேயே வாங்கி குடித்துவிட்டு சீரழியும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மதுகுடிப்பவர்களால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் குறித்து சம்பந்தப்பட்ட வாத்தலை போலீசார் மற்றும் தனிப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் சட்டவிரோத மதுபாட்டில் விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!