/* */

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி, அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

மண்ணச்சநல்லூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி, அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
X

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் ஓட்டப் பந்தய போட்டி நடைபெற்றது.

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் ஏற்பாட்டு செய்திருந்த இந்த போட்டியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்

இந்த மாரத்தான் போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தொடங்கி எதுமலை சாலை, துறையூர் சாலை, புதிய பைபாஸ் சாலை வழியாக திருச்சி சட்டமன்ற அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர் மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன்ராஜன், மண்ணச்சநல்லூர் ஒன்றிய குழு தலைவர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள்வி.எஸ்.பி. இளங்கோவன்,துணை சேர்மன் செந்தில்.

மாவட்ட அவைத் தலைவர் அம்பிகாபதி. முசிறி ஒன்றிய செயலாளர்கள் காட்டுகுளம் கணேசன், ராமச்சந்திரன், திமுக நகர செயலாளர் சிவசண்முக குமார், துணை செயலாளர் கண்ணன், பொருளாளர் கார்த்திகேயன், தொழில் அதிபர் அசோக்ராஜா, பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசபெருமாள், சமயபுரம் சார்லஸ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்த வீரருக்கு 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும்,இரண்டாவது இடத்தைப் பிடித்த வீரரூக்கு எட்டாயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் ,மூன்றாவது இடத்தை பிடித்த வீரருக்கு 5,000 ரூபாய் ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்பட்டது.

Updated On: 29 Aug 2021 8:00 AM GMT

Related News