திருச்சி சமயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

திருச்சி சமயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
X
திருச்சி சமயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

திருச்சி சமயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடித்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த ஒத்தனூர் மாகாளிக்குடி பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் மகன் சந்துரு (வயது 34). இவர் கடந்த மாதம் 14-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது தங்கையின் வீட்டிற்கு சென்றார். அதன் பிறகு நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது சந்துரு வீட்டின் வெளி கேட் பூட்டி இருந்தது.

இதனை கண்டு சந்துரு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சமாளித்துக்கொண்டு கேட்டை திறந்து உள்ளே சென்றபோது உள்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்ததை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் பீரோ இருந்த அறைக்கு சென்றார். அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு லாக்கரில் வைத்திருந்த 3 பவுன் செயின், 1 பவுன் செயின், ஒன்றரை பவுன் ஜிமிக்கி, தோடு என மொத்தம் 5 பவுன் தங்க நகைகளும், ரூ.35 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து சந்துரு கொள்ளிடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கொள்ளை நடந்த வீட்டில் விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் பீரோ மற்றும் கதவு ஜன்னல் உள்ளிட்ட இடங்களில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்தனர். அந்த ரேகைகள் பழைய குற்றவாளிகளின் விரல் ரேகையுடன் ஒத்து போகிறதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் போலீஸ் துப்பறியும் நாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare