சமயபுரத்தில் நாளை காலை 6 மணி வரை மட்டுமே நேர்த்தி கடன் செலுத்த அனுமதி
X
By - R.Ponsamy,Sub-Editor |18 April 2022 4:37 PM IST
சமயபுரம் கோவிலில் நாளை காலை 6 மணி வரை மட்டுமே நேர்த்தி கடன் செலுத்த அனுமதி என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா நடைபெற்றுவருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை நடைபெற உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம் நடைபெற இருப்பதால் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், நாளை (19ம்தேதி) காலை 6 மணி வரை மட்டுமே அக்னிசட்டி, அலகு, காவடி, பால்குடம் ஆகிய நேர்த்திகடன் செலுத்துபவர்கள் தேரோடும் வீதியில் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்புவெளியிடப்பட்டு உள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu