திருச்சி அருகே ஆடு திருடியதாக பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது

திருச்சி அருகே ஆடு திருடியதாக பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது
X

சமயபுரம் அருகே திருடப்பட்ட ஆடு போலீசாரால் மீட்கப்பட்டது.

திருச்சி அருகே ஆடுதிருடியதாக பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மாடகுடியைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 60). இவருக்கு சொந்தமான 2 ஆடுகள் திருட்டு போயின. இது குறித்து சமயபுரம் போலீசில் அவர் அளித்த புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

பின்னர் ஆடுகளை திருடி திருச்சியில் விற்பனை செய்த பிச்சாண்டார் கோவிலை சேர்ந்த ஹரிஹரன் என்கிற ராஜேஷ் (வயது 21), கொள்ளிடம் நம்பர்-1 டோல்கேட்டைடை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் சமயபுரம் அருகே உள்ள பளூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதனைத்தொடர்ந்து ஹரிஹரன் திருச்சி மத்திய சிறையிலும், சிறுவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!