மண்ணச்சநல்லூரில் தேவேந்திர குல வேளாளர் பேரமைப்பு ஆலோசனை கூட்டம்

மண்ணச்சநல்லூரில் தேவேந்திர குல வேளாளர் பேரமைப்பு ஆலோசனை கூட்டம்
X

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில்  தேவேந்திர  குல வேளாளர் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் தேவேந்திர குல வேளாளர் பேரமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் நொச்சியம் திருமுருகன் திருமண மண்டபத்தில் தேவேந்திரகுலவேளாளர்கள் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மண்ணை தொகுதி செயலாளர் மான்பிடிமங்கலம் ராஜா தலைமை தாங்கினார்.

இதில் தலைவர் ம.அய்யப்பன் சிறப்புரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் குடமுருட்டி சேகர் பங்கேற்றார். பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கோ.சங்கர் கருத்தரங்க விளக்கவுரையாற்றினார்.

மேலும் மாநில நிர்வாகி என்ஜினியர் சமயபுரம்கோபிநாத்,ஶ்ரீரங்கம் தொகுதி செயலாளர் புலிவலம் பாவேந்தர்,லால்குடி தொகுதி செயலாளர் வெள்ளனூர் துரை.முருகானந்தம் மற்றும் ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai future project