கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடிய பெண் போலீஸ்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடிய பெண் போலீஸ்
X

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தையின் பிறந்த நாள் விழாவில் பெண் போலீஸ் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தையின் பிறந்த நாளை மத்திய மண்டல ஐ.ஜி. உத்தரவின் படி பெண் போலீஸ் கொண்டாடினார்.

திருச்சி மத்திய மண்டலத்தில் 'காக்கி கவசங்கள்' என்ற திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின்படி திருச்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பை அந்தந்த எல்லைக்குட்பட்ட பெண் போலீசார் உறுதி செய்ய வேண்டும் என மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் ஓமந்தூர் கிராமத்தில் வசித்து வரும் குழந்தைகளை மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தின் பெண் காவலர் சந்தியா என்பவர் பார்ப்பதற்காக சென்றார்.

அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த தன்சிகா என்ற 6 வயது பெண் குழந்தை அன்று பிறந்தநாள் கொண்டாடியதை அறிந்து குழந்தையுடன் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தார். அந்த பெண் போலீசின் செயலை மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பாராட்டியுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!