பஸ் படிகட்டில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி

பஸ் படிகட்டில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி
X

மாணவனின் அடையாள அட்டை.

நம்பர் ஒன் டோல்கேட்டில் பஸ் திரும்பும் பொழுது, எதிர்பாராத விதமாக படிக்கட்டில் இருந்து நழுவி நந்தகுமார் கீழே விழுந்துள்ளார்.

திருச்சி மாவட்டம், கொண்ணகுடியை சேர்ந்தவர் தேவராஜ் என்பவரின் மகன் நந்தகுமார். இவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பிஏ., தமிழ் பயின்று வருகிறார். இந்நிலையில் கல்லூரி செல்வதற்காக நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்த தனியார் பஸ்சில் ஏறியுள்ளார். பஸ்சில் அதிக கூட்டம் இருந்த காரணத்தால் அவர் படிக்கட்டில் தொங்கியபடி சென்றுள்ளார். நம்பர் ஒன் டோல்கேட்டில் பஸ் திரும்பும் பொழுது, எதிர்பாராத விதமாக படிக்கட்டில் இருந்து நழுவி நந்தகுமார் கீழே விழுந்துள்ளார். இதில் பஸ்சின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!