திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நாளை விருப்ப மனு

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நாளை விருப்ப மனு
X

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் பரஞ்ஜோதி.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு நாளை முதல் பெறப்படுகிறது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தலைமைக் கழக அறிவிப்பின் படி,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகள், வருகின்ற 26.11.2021 முதல் 29.11.2021 வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் உரிய கட்டண தொகையை செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

மாநகராட்சி வார்டு மன்ற உறுப்பினர்-ரூ.5,000/-நகர மன்ற வார்டு உறுப்பினர்-ரூ.2,500/- பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்-ரூ.1,500/-நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி ஏற்கனவே விருப்பமனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகள், அதற்கான கட்டண அசல் ரசீதினை வைத்திருப்பவர்கள் மட்டுமே, மாவட்ட கழக அலுவலகத்தில் சமர்ப்பித்து, கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

விருப்பமனு பெறப்படும் தொடக்க நிகழ்ச்சி 26.11.2021 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெறும்.அது சமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், நகர, பகுதி, ஒன்றிய, பேரூராட்சி கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்