மின் கட்டண உயர்விற்கு எதிராக மண்ணச்சநல்லூரில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்விற்கு எதிராக மண்ணச்சநல்லூரில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
X

மண்ணச்சநல்லூரில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மின் கட்டண உயர்விற்கு எதிராக மண்ணச்சநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பின்படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வதிமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மண்ணச்சநல்லூர் பெட்ரோல் பங்க் அருகில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி, அண்ணாவி மாவட்ட கழக அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராசு, பரமேஸ்வரி முருகன், இந்திராகாந்தி, மல்லிகா சின்னசாமி, கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் திரளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது