திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
X

திருச்சி அருகே தீப்பிடித்து எரிந்த கார்.

திருச்சி சிறுகனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மீனாட்சி புரத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மகன் ராகேஷ்( வயது 24). இந்த குடும்பத்தினர் காரில் சென்று வெங்கடாஜலபதியை தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

சென்னையிலிருந்து திண்டுக்கல் செல்வதற்காக சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர். அந்த காரில் இரண்டு குழந்தைகள் மற்றும் நான்கு பெரியவர்கள் இருந்தனர். இந்த கார் இன்று காலை திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்த சனமங்கலம் என்ற இடத்தில் வந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து சுதாரித்துக்கொண்ட டிரைவர் உடனடியாக காரை நிறுத்தினார். காரில் இருந்த குழந்தைகள் உள்பட ஆறு பேரும் கீழே இறங்கினார்கள்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் வந்து அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்துவிட்டது. எந்திர கோளாறு காரணமாக கார் தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது பற்றி சிறுகனூர் போலீசார் அந்த பகுதியில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளின் அடிப்படையில்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேசிய நெடுஞ்சாலையில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி