ஊராட்சித் தலைவரின் கணவரைக் கண்டித்து 5 உறுப்பினர்கள் ராஜினாமா

ஊராட்சித் தலைவரின் கணவரைக்  கண்டித்து 5 உறுப்பினர்கள் ராஜினாமா
X
ராஜினாமா கடிதம் கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்த  ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்.
திருச்சியில் ஊராட்சி தலைவரின் கணவரைக் கண்டித்து 5 உறுப்பினர்கள் ராஜினாமா கடிதத்தை கலெக்டரிடம் கொடுத்தனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது தீராம் பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக இருப்பவர் சாவித்திரி.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இதில் வார்டு உறுப்பினர்களான ரங்கம்மாள், ரங்கபாஷ்யம், சௌந்தர்யா, நதியா, தங்கையன் ஆகிய 5 பேரும் நேற்று மாலை திடீரென திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

ஆட்சியர் சிவராசுவை நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். ஊராட்சி தலைவரின் கணவர் வார்டு உறுப்பினர்ககளை எந்த பணியும் செய்யவிடாமல் தடுப்பதாகவும், அவரது நடவடிக்கைகளை கண்டித்து தங்களது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இது சம்பந்தமாக விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story
ai in future agriculture