திருச்சி அருகே நடந்த விபத்தில் வேன் கவிழ்ந்து 14 மாற்றுத்திறனாளிகள் காயம்

திருச்சி அருகே நடந்த விபத்தில் வேன் கவிழ்ந்து 14 மாற்றுத்திறனாளிகள் காயம்
X
திருச்சி அருகே நடந்த விபத்தில் வேன் கவிழ்ந்து 14 மாற்றுத்திறனாளிகள் காயம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சுமார் 20 பேர் ஒரு வேனில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். சென்னையில் நாளை நடைபெற உள்ள ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்பது இவர்களது திட்டமாகும். இவர்கள் வந்த வேன் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபரம் அருகே இன்று அதிகாலை வந்த போது ஒரு லாரி மீது மோதி கவிழ்ந்தது. இதில் வேனை ஓட்டிய டிரைவர் உள்பட மாற்றுத்திறனாளிகள் 14 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து பற்றி சமயபுரம் போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு