மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்

மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்
X
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற வேட்பாளர் பரஞ்சோதியை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி ஆதரித்து நடிகை விந்தியா மண்ணச்சநல்லூர் மற்றும் சமயபுரம் பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது.

திருச்சி எனக்கு சொந்த ஊர் இல்லை, ஆனால் திருச்சிக்கு வந்தால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சமயபுரம் மாரியம்மன், உறையூர் வெக்காளியம்மன், பரஞ்சோதி ஆகிய 4 பேரை பார்க்காமல் செல்லமாட்டேன்.

மலைக்கோட்டை மக்கள் காவிரி ஆற்றை போல பரந்த மனம் கொண்டவர்கள். நம்ம அடிமட்ட தொண்டர்கள் அதிமுக தலைமையை அலங்கரிக்க முடியும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசு அதிமுக அரசுதான்.

எனவே அதிமுகவுக்கு வாக்களியுங்கள்" என்றார். மேலும் உடன் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி இருந்தார்..

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!