பதுக்கி வைத்த 5 டன் ரேசன்அரிசி பறிமுதல் 3 பேர் கைது

பதுக்கி வைத்த 5 டன் ரேசன்அரிசி பறிமுதல் 3 பேர் கைது
X

திருச்சி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பதுக்கிய 5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர் .

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் புவனேஸ்வரிநகர் பகுதியில் உள்ள ஒரு பிளவர் மில்லில் ரேசன்அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட எஸ்பி., அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்ட எஸ்பி., ஜெயச்சந்திரன் உத்தரவின்படி காவல் துணை கண்காணிப்பாளர் பால்சுதர் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் புவனேஸ்வரி நகரில் உள்ள பிளவர்மில்லில் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.அப்போது சட்டவிரோதமாக 85 மூட்டைகளில் 5 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கடத்தப்படும் அரிசிகளை மாவுகளாக அரைத்து உணவு விடுதிகள் மற்றும் இரவு நேர கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக மில் உரிமையாளர் மண்ணச்சநல்லூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (58) மற்றும் பிளவர் மில்லில் வேலை செய்த காசிக்கடை தெருவைச் சேர்ந்த ரங்கராஜ் (58) இவருடைய மகன் கார்த்திக் (27) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!