/* */

சீட் மறுப்பு- முதல்வரிடம் பெண் எம்எல்ஏ., கண்ணீர்

சீட் மறுப்பு- முதல்வரிடம் பெண் எம்எல்ஏ., கண்ணீர்
X

திருச்சி எம்எல்ஏ-வான தனக்கு இம்முறை சீட் மறுக்கப்பட்டது குறித்து தமிழக முதல்வரிடம் பெண் எம்எல்ஏ கண்ணீர் விட்டு அழுதார்.

சொந்த ஊர் செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று இரவு திருச்சி வந்தனர். அவர்களை திருச்சி விமான நிலையத்தில் திருச்சி மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் குமார், வெல்லமண்டி நடராஜன், இந்திராகாந்தி, பத்மநாதன், பரஞ்ஜோதி, கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் வரவேற்பு அளித்தனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் கடந்த 2016 ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏ வாக இருக்கும் பரமேஸ்வரி முருகனுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படாமல் முன்னாள் அமைச்சரான பரஞ்சோதிக்கு மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஸ்ரீரங்கம் தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சரான வளர்மதிக்கு இம்முறை சீட் வழங்கப்படவில்லை.

அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சரான கு.ப. கிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில், பரமேஸ்வரி முருகன் தனக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்காதது குறித்து கண்ணீருடன் முதலமைச்சரிடம் முறையிட்டார். அப்போது முதல்வர் அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். இது குறித்து பேசிய பரமேஸ்வரி முருகன் தனக்கு வாய்ப்பு தந்தாலும், தராவிட்டாலும் முதல்வருக்கு விசுவாசமாக இருப்பேன் என்றார். பெண் எம்எல்ஏ தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து முதலமைச்சரிடம் கண்ணீர் விட்டு அழுதது அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 14 March 2021 6:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது