லாரி மோதியதில் கல்லூரி பேருந்து விபத்து: 8 மாணவிகள் காயம்

லாரி மோதியதில் கல்லூரி பேருந்து விபத்து: 8 மாணவிகள் காயம்
X
திருச்சி நெடுங்கூரில்தனியார் கல்லூரி பேருந்து மீதி லாரி மோதிய விபத்தில் 8 மாணவிகள் காயம்.சிறுகனூர் போலீசார் விசாரணை.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்திற்கு சொந்தமான பேருந்து கல்லூரி மாணவிகளை ஏற்றிக் கொண்டு திருச்சியிலிருந்து பெரம்பலூரில் உள்ள கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது நெடுங்கூர் பேருந்து நிறுத்தத்தில் மாணவிகளை ஏற்றிக் கொண்டிருக்கும் போது பெரம்பலூர் மாவட்டம் அல்லா கோயில் தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகன் செந்தில் (38) ஓட்டி வந்த லாரி பேருந்து பின் பக்கமாக மோதியதில் பேருந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த கல்லூரி மாணவிகள் 7 பேர் மற்றும் பேருந்து ஓட்டுநர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் ஒரு மாணவிக்கு கால் எலும்பு முறிவு ஏற்ப்பட்டது. காயமடைந்தவர்களை மீட்டு சிறுவாச்சூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். லாரி ஓட்டுநர் செந்திலுக்கு காலில் அடிப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிறுகனூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business