தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
X

பைல் படம்.

தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள பூவாளூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த மாரிமுத்துவின் மகன் சந்துரு(வயது 23). பட்டய படிப்பு முடித்த சந்துரு சிறுகனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சந்துரு நேற்று மாலை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவலறிந்த லால்குடி போலீசார், தூக்கு போட்டு இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!