திருச்சி அருகே வீட்டில் துணி காய போட்ட பெண் மின்சாரம் பாய்ந்து பலி

திருச்சி அருகே வீட்டில் துணி காய போட்ட பெண் மின்சாரம் பாய்ந்து பலி
X
திருச்சி அருகே வீட்டில் துணி காய போட்ட பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், கல்லக்குடி அருகே உள்ள நத்தமாங்குடி கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மனைவி அந்தோணிமேரி (வயது 52). இவரது மகன் ஆல்பர்ட் (24) என்பவருடன் வசித்து வந்தார். நேற்று அந்தோணி மேரி வீட்டில் உள்ள கம்பியில் துணியை காயப்போட்டுள்ளார். அப்போது, அதில் மின்வயர் உரசி மின்சாரம் பாய்ந்து கொண்டு இருந்துள்ளது.

இதை கவனிக்காமல் துணியை காயப்போட்ட போது, அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை புள்ளம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!