/* */

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கவுரவ விரிவுரையாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கௌரவ விரிவுரையாளர்கள் சம்பளம் வழங்க கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கவுரவ விரிவுரையாளர்கள் காத்திருப்பு போராட்டம்
X

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கௌரவ விரிவுரையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட 10 உறுப்புக் கல்லூரிகள் கடந்த 2019 -20 ஆம் கல்வி ஆண்டில் அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டன. அப்படி மாற்றம் செய்யப்பட்ட போது அவற்றில் கௌரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு, அந்தந்த கல்லூரி நிர்வாகங்களே கல்வி ஆண்டின் இறுதிவரை சம்பளம் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கடந்த நான்கு மாதங்களாக அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டவற்றில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்கள், அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.இதன் காரணமாக அவர்கள் ஏற்கனவே கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.

அதன் பின்னரும் பிரச்சினை தீர்க்கப்படாததால் கல்லூரி நிர்வாகங்கள் முன்பாக இன்று காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


இந்த போராட்டம் தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின்(ஏ.யு.டி) முன்னாள் மாநிலத் தலைவர் பாண்டியன் கூறும்போது 'திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட உறுப்பு கல்லூரிகளில் இருந்து அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்ட 10 கல்லூரிகளில் தற்போது363 கௌரவ விரிவுரையாளர்கள் , மணி நேர விரிவுரையாளராக நியமிக்கப்பட்ட 205 மற்றும் அதிகாரிகள் தொன்னூறு பேர் உள்பட 700-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு கடந்த மே மாதத்திலிருந்து சம்பளம் வழங்கப்படவில்லை. இதுபற்றி பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்திற்கு சங்கம் சார்பில் கொண்டு சென்றபோது ஜூலை மாதம் 30ஆம் தேதி வரை பொறுத்திருங்கள் .அரசிடம் பேசி ஏற்பாடு செய்கிறோம் என்றனர் .ஆனால் இன்றுவரை அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. நிரந்தர விரிவுரையாளர்கள் 31பேர் தவிர மற்ற 700 பேருக்கும் நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் அவர்களின் குடும்பம் வறுமையில் வாடுகிறது.

குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வரும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வேறு வழி இல்லை. ஆதலால் தமிழக அரசு இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்திலுள்ள மற்ற பல்கலைக் கழகங்களின் ஆளுகைக்குட்பட்ட கல்லூரிகளில் இந்தப் பிரச்சினை இல்லை. சம்பளம் வழங்கப்பட்டு விட்டது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு மட்டும் இந்த பிரச்சினை இருப்பதால் முதலமைச்சர் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் இதில் நேரடியாக கவனம் செலுத்தி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்' என்றார்.

Updated On: 24 Sep 2021 9:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!