டிராக்டரில் ஏறினார் திருச்சி கலெக்டர்-ஆச்சரியத்துடன் பார்த்தனர் மக்கள்

டிராக்டரில் ஏறினார் திருச்சி கலெக்டர்-ஆச்சரியத்துடன் பார்த்தனர் மக்கள்
X

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு டிராக்டரில் சென்று ஆய்வு செய்தார்.

மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு டிராக்டரில் அமர்ந்து சென்று நேரில் ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்து உள்ளன. பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

இதன் ஒருபகுதியாக அவர் இன்று புள்ளம்பாடி ஒன்றியம் நந்தியாற்றில் மழையினால் நீர் நிரம்பி சங்கேந்தி பகுதியில் நீர்சூழ்ந்துள்ளதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட இடங்களுக்கு காரில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இருப்பினும் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்த கலெக்டர் சிவராசு காரில் இருந்து இறங்கி அங்கிருந்த விவசாயி ஒருவரை அழைத்து டிராக்டரை எடுத்து வரச்சொன்னார். அதில் ஏறி அமர்ந்த கலெக்டர் சிவராசு வெள்ள சேதங்களை டிராக்டரில் இருந்தவாறே பல இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் டிராக்டரில் வருவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்த ஆய்வின் போது லால்குடி எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன் உடனிருந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!