திருச்சி- புள்ளம்பாடியில் அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவிப்பு

திருச்சி- புள்ளம்பாடியில் அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவிப்பு
X

புள்ளம்பாடியில் உள்ள அண்ணா  சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட  அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் மாலை அணிவித்தார்.

திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புள்ளம்பாடியில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் லால்குடி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த புள்ளம்பாடியில் அண்ணா பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புள்ளம்பாடியில் அண்ணா சிலைக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. ப.குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.

இந்த விழாவில் ஒன்றிய செயலாளர்கள் ராஜாராம், .சிவகுமார், சூப்பர் நடேசன், அசோகன், கும்பகுடி கோவிந்தராஜ், மாவட்ட அவைத்தலைவர் பர்வீன்கனி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாலன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அன்பில் தர்மதுரை, மாவட்ட பாசறை செயலாளர் அருண் நேரு, சிறுபான்மை பிரிவு செயலாளர் டோமினிக், பகுதி கழக செயலாளர் தண்டபாணி, மற்றும் குண்டூர் செல்வராஜ்,மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய அணி நிர்வாகிகள், ஒன்றிய கழக, பேரூர் கழக, ஊராட்சி கழக, கிளை கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!