திருச்சி அருகே செல்போன் கடையில் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

திருச்சி அருகே செல்போன் கடையில் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த கல்லக்குடி அடைக்கலம் காலனியை சேர்ந்தவர் தீபக்குமார் (வயது 27). இவர் புள்ளம்பாடியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 23-ந்தேதி ஊரடங்கை பயன்படுத்தி இவரது கடையின் பூட்டை அறுத்து 6 செல் போன்கள், ரூ.7,500 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இது குறித்து கல்லக்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் சிறுவயலூர் தெற்கு தெருவை சேர்ந்த சுபாஷ் (வயது 21) மற்றும் 2 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் செல்போன் கடையில் திருடியதை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu