லால்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்

லால்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
X
லால்குடியில் மறியல் செய்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
லால்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். மறியல் போராட்டத்தை வட்டச் செயலாளர் மார்ட்டின் தலைமையேற்று நடத்தி வைத்தார். முன்னதாக மாவட்ட குழு உறுப்பினர் பழனி ராஜ் பேசி துவக்கி வைத்தார்.

அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரியும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும், மின்சாரம் திருத்த சட்ட மசோதாவை மாற்றியமைக்க கோரியும், வீட்டு வரி மின்சார உயர்வை திரும்ப பெறப் கோரியும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. லால்குடி ரவுண்டானாவில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!