திருச்சி அருகே காரில் வந்தபோது இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரம்

திருச்சி அருகே காரில்  வந்தபோது இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரம்
X

பைல் படம்.

திருச்சி அருகே காரில் வந்த போது இளம்பெண்ணை பலாத்காரம் செய்த அண்ணன் பற்றி பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் திருப்பூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிவந்துள்ளார். அவர் வேலைக்கு வருவதில்லை என்று திருப்பூரில் உள்ள அந்த டெக்ஸ்டைல் நிறுவனத்தில் இருந்து இளம்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த இளம்பெண்ணை காணவில்லை என்று அவரது பெற்றோர் லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.மேலும் அந்த பெற்றோர் தங்களது மகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர் டால்மியாபுரத்தில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பெற்றோர் இளம்பெண்ணை பார்ப்பதற்கு டால்மியாபுரம் சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு கண்ணீர் விட்டு அழுத இளம்பெண்,திருப்பூரில் இருந்து காரில் வரும் போது பெரியப்பாவின் மகன் தன்னை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததாகவும், வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி இங்குகொண்டு வந்து வைத்துள்ளதாக கதறி அழுதபடி தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் இதுகுறித்து லால்குடி மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்பேரில் மகளிர் போலீசார் பெரியப்பா மகன் மார்கண்டன் (வயது 35) என்பவர் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணன் உறவுமுறை கொண்ட ஒருவரே தனது தங்கையிடம் தவறாக நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!