லால்குடி பகுதியில் நடந்த சுதந்திர தின விழாவில் மரக்கன்றுகள்

லால்குடி அருகே நடந்த சுதந்திர தினவிழாவில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் மாற்றம் அமைப்பு மற்றும் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் விளையாட்டு குழுவினர் சார்பில் நமது இந்திய நாட்டின் 77 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நம்முடைய நாடு சுதந்திரம் பெற பல தலைவர்கள் போராடி பலர் உயிர்தியாகம் செய்து நமக்கு இந்த சுதந்திரத்தை பெற்று தந்தனர். அவர்களின் தியாகம் விலைமதிப்பற்றது. எனவே நாம் ஒவ்வொருவரும் நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும். ஜாதி, மதம், மொழி, இனம் என்கிற எந்த பகுபாடுமில்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். நாட்டின் முனேற்றத்திற்காக இணைந்து பாடு பட வேண்டும். மேலும் நாம் இந்த இயற்கையை பாதுகாத்து மரங்களை வளர்த்து சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டும் என்று நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாற்றம் அமைப்பின் நிறுவனரும், தேசிய விருது பெற்ற குறும்பட நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் கலந்து கொண்டு இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் பல வகைகளான மரகன்றுகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் அமைப்பின் நிர்வாகிகள் விளையாட்டு பிரிவு செயலாளர் சுரேஷ் பாபு ,வழக்கறிஞர் ஆறுமுகம், இணை செயலாளர் எழில் மணி மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா, இணை செயலாளர் அல்லி கொடி, சுபாஷ் ,கண்ணா, அஜித்,கணிஷ்,திலீப், சரண்,பிரபு, மதன்,மணி,பாண்டி, அஜய்,தர்ஷன் சத்தியேந்திரன், ராஜேஸ்வரி,கீர்த்தி, நாககன்னி,சகுந்தலா,கனகவள்ளி,மற்றும் கலைபுயல் கபடி குழு பாய்ஸ் விளையாட்டு குழுவினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரகன்றுகள் வழங்கப்பட்டு அப்பகுதியில் மரகன்றுகள் நடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu