லால்குடி பகுதியில் 25-ம் தேதி மின்வினியோகம் நிறுத்தம்

லால்குடி பகுதியில் 25-ம் தேதி மின்வினியோகம் நிறுத்தம்
X
லால்குடி பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக 25ம் தேதி மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா வாளாடி துணை மின்நிலையம் 11கி.வோ. வேலாயுதபுரம் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறப்படும் பகுதியில் ஜூலை 25ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கீழ் மாரிமங்கலம், அகலங்கநல்லூர், தாரானூர், மாந்துறை, திருமங்கலம், சரவணாநகர், பிரியா கார்டன் ஒரு பகுதி, கைலாஸ்நகர் பகுதிகளில் 25ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் லால்குடி பகுதி செயற்பொறியாளர் அன்புசெல்வம் அறிவித்துள்ளார்.

Tags

Next Story
ai marketing future