டீசல் நிரப்பி விட்டு பணம் தராமல் தப்பி சென்றவரை மடக்கி பிடித்த போலீசார்

டீசல் நிரப்பி விட்டு பணம் தராமல் தப்பி சென்றவரை மடக்கி பிடித்த போலீசார்
X
லால்குடி அருகே போலீசார் மடக்கி பிடித்த ஜீப்.
ஜீப்பிற்கு டீசல் நிரம்பிப விட்டு பணம் தராமல் தப்பிச் சென்றவரை லால்குடடியில் பேரிகார்டு வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் ஜவகர்லால் நேரு மகன் சண்முகம் (வயது 48). ஜீப்பில் வந்த இவர் முசிறியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ரூ. 2 ஆயிரத்திற்கு டீசல் போட்டுள்ளார். பின்னர் பணம் கொடுக்காமல் ஜீப்பை எடுத்துக் கொண்டு திருச்சியை நோக்கி தப்பி வந்துள்ளார். இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் முசிறி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் மண்ணச்சநல்லூர் அருகே குணசீலம் திருச்சி-சேலம் சாலையில் பேரிகார்டு வைத்து ஜீப்பை மடக்கிய போது அந்த தடுப்பை இடித்து தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.


பின்னர் போலீசார் தகவல்படி சமயபுரம் நம்பர் 1 டோல்கேட்டில் போலீசார் அந்த நபரை மடக்கிய போதும் அங்கிருந்தும் அவர் தப்பி லால்குடியை நோக்கி தப்பிச் சென்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து லால்குடி நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ராஜ் தலைமையில் ராஜா உள்ளிட்டோர் போலீசார் லால்குடி ரவுண்டானாவில் பேரிகார்டை வைத்து ஜீப்பில் தப்பி வந்த நபரை மடக்கி பிடித்தனர்.

நடு இரவில் டீசல் போட்டு பணம் தராமல் தப்பிச் சென்ற நபர் பல்வேறு இடங்களில் சினிமா பாணியில் மடக்கி பிடித்த போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த நபர் இறுதியாக லால்குடியில் சிக்கினார். அவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நள்ளிரவில் பல்வேறு இடங்களில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பிச் சென்ற சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்