திருச்சி, கல்லக்குடியில் 7 மோட்டார் சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது

திருச்சி, கல்லக்குடியில் 7 மோட்டார் சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது
X

திருச்சி,கல்லக்குடியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய சந்திரசேகரனை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,கல்லக்குடியில் 7 மோட்டார் சைக்கிள்களை திருடிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாவட்டம், கல்லக்குடி காவல் சரகத்தில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போவதாக கல்லக்குடி போலீசில் ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதே போல, கல்லக்குடி கடைவீதியில் இருசக்கர வாகனம் ஒன்று திருட்டு போனதாக சிமெண்டு ஆலை ஒப்பந்த பணியாளர் கொடுத்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் இளங்கோவன், ராஜேந்திரன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கல்லகம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்த போது அவர் அரியலூர் மாவட்டம், கல்லகம் கேட், பூண்டி கிராமத்தை சேர்ந்த சேகரன் என்கிற சந்திரசேகரன் (வயது 44) என்பதும், லாரி டிரைவர் என்பதும், தெரியவந்தது. மேலும் அவருக்கு போதிய வேலை கிடைக்காததால் இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரிய வந்தது.

திருச்சி, கல்லக்குடி உள்ளிட்ட இடங்களில் 6 வாகனங்கள் திருடியதாக அவர் வாக்குமூலம் அளித்தார். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் பூண்டி கிராமத்தில் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அவர் ஓட்டி வந்த மோட்டார். சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் இது தொடர்பாக அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்