காணக்கினிய நல்லூரில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்த அமைச்சர்கள்
திருச்சி மாவட்டம் காணக்கினிய நல்லூரில் புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை அமைச்சர்கள் நேரு, மூர்த்தி திறந்து வைத்தனர்.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம் காணக்கனியநல்லூர் ஊராட்சியில் புதிதாக பத்திரப்பதிவுத்துறை சார்பில் சார் பதிவாளர் அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். சௌந்தரபாண்டியன் எம்.எல்.ஏ.,பதிவுத்துறை துணைத் தலைவர் ராமசாமி, மாவட்ட பதிவாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு,வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டுபுதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
தொடர்ந்து சிறுவயலூர் கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ்ரூ. 60.4 லட்சம் மதிப்பில் சிறுவயலூர்- தாப்பாய் இடையே ஈரடுக்கு மெட்டல் சாலை அமைக்கும் பணியையும், மீன்வளத்துறை சார்பில் கண்மாய்களில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு செய்தலுக்காக விடுதல் உள்ளிட்ட பணிகளையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
விழாவில் தொழிலதிபர் கே.என்.அருண் நேரு, திருச்சி மாவட்ட நகர்புற ஊரமைப்பு குழு உறுப்பினர் வைரமணி, மாவட்டத் திட்ட அலுவலர் தேவநாதன், லால்குடி கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் விக்னேஷ், புள்ளம்பாடி ஒன்றிய குழு தலைவர் ரஷ்யா கோல்டன் ராஜேந்திரன் உள்பட தி.மு.க பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே திருச்சி நகரில் கண்டோன்மெண்ட், தில்லைநகர், உறையூர், கே.கே.நகர், டவுண்ஹால், ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் மற்றும் லால்குடி, முசிறி, மணப்பாறை ஆகிய இடங்களில் சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இப்போது புதிதாக காணக்கனிய நல்லூரிலும் சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu