லால்குடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் லாரி மோதி உயிரிழப்பு

லால்குடி அருகே மோட்டார்  சைக்கிளில் சென்றவர் லாரி மோதி உயிரிழப்பு
X
லால்குடி அருகே வெளிநாட்டிலிருந்து வந்தவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தபோது லாரி மோதி இளைஞர் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த ஆலம்பாடி மேட்டுத்தெரு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் மகன் பாரத் (வயது 27). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு விமானம் மூலம் திருச்சி வந்தார். பாரத்தை அழைத்து வர அவரது உறவினரான லால்குடி அடுத்த ஒரத்தூர் நடுத்தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் அஜித்குமார் (வயது 29), திருச்சி விமான நிலையத்திற்கு தனது பைக்கில் வந்தார்.

பின்னர் இருவரும் ஒரே பைக்கில் திருச்சி விமான நிலையத்திலிருந்து பணிகள் முடியாத நிலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பாரத்தின் சொந்த ஊரான ஆலம்பாடி மேட்டூருக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது லால்குடி அடுத்த வெள்ளனூர் பகுதியில் நெடுஞ்சாலைப் பணியில் ஈடுபட்டு வரும் லாரி ஒன்று பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அஜித்குமார் உயிரிழந்தார். மேலும் விடுமுறைக்காக வெளிநாட்டில் இருந்து வந்த பாரத் படுகாயமடைந்து லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்