லால்குடியில் வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

லால்குடியில் வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
X
லால்குடியில் இன்று பதவி ஏற்றுக்கொண்ட வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள்.
லால்குடியில் வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி வக்கீல் சங்க நிர்வாகிகள் தேர்தல், கடந்த மார்ச் 25 ம் தேதி நடந்தது. இதில் தலைவராக தூயமணி, துணை தலைவராக பத்மநாபன், செயலாளராக செந்தில்குமார், இணை செயலாளராக லட்சுமிபதி, பொருளாளராக சேவியர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், லால்குடி கோர்ட் வளாகத்தில் இன்று காலை பதவியேற்பு விழா நடந்தது. வக்கீல் சங்க தலைவர் தூயமணி, துணை தலைவர் பத்மநாபன், செயலாளர் செந்தில்குமார், இணை செயலாளர் லட்சுமிபதி, பொருளாளர் சேவியர் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

விழாவில் வக்கீல்கள் எடிசன், ஜான்சன், பாண்டியராஜன் உட்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
photoshop ai tool